Posts

Showing posts from September, 2019

என். டி. ராமா ராவ்

என். டி. ராமா ராவ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக ‘என்.டி.ராமா ராவ்’ என்றும், தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும்,  அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான நேர்த்தியுடன் செம்மையாக சித்தரிக்கப்பட்ட அவர், பின்னர் தெலுங்குத் திரைப்படத் துறையில், திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் கவனம் செலுத்தினார். டோலிவுட்டில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாடும், நடிப்புத் திறமையும், அவரை ஆந்திர பிரதேசத்தில் ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்தவராக மாற்றியது. என்.டி. ராமா ராவ் அவர்கள், திரைப்படத் துறையிலிருந்து ஓய்வுப் பெற்று, ஒரு அரசியல்வாதியாக மாறிய பிறகும் கூட,  அவர் தன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகவே திகழ்ந்தார். அவரது...

ஹேமமாலினி

ஹேமமாலினி இந்தித் திரைப்பட உலகில் இருபது வருடத்திற்கு மேல் “கனவுக் கன்னியாக” ரசிகர்களை வியக்க வைத்தவர், ஹேமமாலினி. தமிழ்நாட்டில் பிறந்து, மும்பைக்கு இடம் பெயர்ந்து, இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய அவர், பரதநாட்டிய கலையிலும் சிறந்து விளங்கினார். அனந்தசாமி தயாரித்த “சப்னோ கா சௌதாகர்” என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, பல ஆண்டுகள் ரசிகர்கள் மனதில் கனவுக் கன்னியாக வளம்வந்த ஹேமமாலினியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: அக்டோபர் 16, 1948 இடம்: திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு(இந்தியா) பணி: திரைப்பட நடிகை புனைப்பெயர்: கனவுக் கன்னி முதல் திரைப்படம்: “சப்னோ கா சௌதாகர்” பிறப்பு: ஹேமமாலினி அவர்கள், இந்தியாவின் தமிழ்நாடு மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளியில் அக்டோபர் 16, 1948 ஆம் ஆண்டு சக்கரவர்த்திக்கும், ஜெயாவிற்கும் மகளாக பிறந்தார். இவருடைய தந்தை இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் அதிகாரியாகவும், தாய் சமூக சேவகராகவும் பணிபுரிந்து வந்தனர். ஆரம்ப வாழ்க்கை: தந்தை தில்லியில் வேலைப்பார்த்து வந்ததால், ஹேமமாலினியின் பள்ளிப்...

மம்முட்டி

மம்முட்டி ‘முகமது குட்டி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘மம்முட்டி’, ஒரு புகழ்பெற்ற மலையாள நடிகராவார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” மூன்று முறையும், கேரள அரசின் விருதை  மூன்று முறைக்கு மேலும், ஏழு முறைக்கும் மேல் ‘ஃபிலிம்பேர் விருதையும், மத்திய அரசின் “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் பல விருதுகளையும் பெற்று, மலையாள திரையுலகின் மாபெரும் நடிகனாக விளங்குகிறார். மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மேலும்  விரிவாகக் காண்போம். பிறப்பு: செப்டம்பர் 07, 1951 இடம்: செம்பு (கோட்டயம் மாவட்டம்), கேரளா மாநிலம், இந்தியா பணி: மலையாள திரைப்பட நடிகர். நாட்டுரிமை: இந்தியா  பிறப்பு: மம்முட்டி அவர்கள், 1951  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7  ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள செம்பு என்ற இடத்தில் இஸ்மாயில் என்பவருக்கும், பாத்திமாவுக்கும் மகனாக ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் முகமது குட்டி...

கிஷோர் குமார்

கிஷோர் குமார் இந்தித் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த “கிஷோர்தா” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கிஷோர் குமார், தன் குரலால் இசை ரசிகர்களை வசப்படுத்தி பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி சரித்திரம் படைத்தார். பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், பாடலாசிரியராகவும், மற்றும் இயக்குனராகவும் இந்தித் திரைப்பட உலகை வலம்வந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மேலும் விரிவாகக் காண்போம். பிறப்பு: ஆகஸ்ட் 04, 1929 இடம்: கந்த்வா, இந்தியா பணி: பாடகர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர். இறப்பு: அக்டோபர் 13, 1987 நாட்டுரிமை: இந்தியா பிறப்பு: கிஷோர் குமார் அவர்கள், 1929  ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 04  ஆம் நாள் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள கந்தவா மாவட்டத்தில் குஞ்சாலால் கங்குலிக்கும், கெளரி தேவிக்கும் மகனாக ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு “அசோக் குமார்” மற்றும் “அனூப் குமார்” என்ற இரண்டு சகோதரர்களும், சதி தேவி என்ற சகோதரியும் இருந்தனர். ஆரம்ப வாழ்க்கை: கிஷோர் குமார் அவர்கள், குழந்தையாக இருக்கும...

மோகன்லால்

மோகன்லால் ‘மோகன்லால் விஸ்வநாதன் நாயர்’ என்ற இயற்பெயர் கொண்ட மோகன்லால் ஒரு புகழ் பெற்ற மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” நான்கு முறையும், ஒன்பதுக்கும் மேல் “பிலிம்பேர்” விருதையும், பலமுறை “கேரள மாநில அரசு விருதையும்”, மற்றும் இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான “பத்ம ஸ்ரீ” விருதையும் பெற்று தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்குபவர். இத்தகைய சிறப்புப் பெற்றுத் திகழும் மாபெரும் நடிகர் மோகன்லாலின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம். பிறப்பு: மே 21, 1960 இடம்: இலந்தூர் (பத்தனம்திட்ட மாவட்டம்), கேரளா பணி: திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர். நாட்டுரிமை: இந்தியா பிறப்பு: மோகன்லால் அவர்கள், 1960  ஆம் ஆண்டு மே மாதம் 21  ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்ட மாவட்டத்திலுள்ள இலந்தூர் என்ற இடத்தில் விஸ்வநாதன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் மோகன்லால் விஸ்வநாதன் நாயர். ஆரம...

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையினால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி கீழே காண்போம். பிறப்பு:  ஆகஸ்ட்  13, 1963 பிறப்பிடம்:  சிவகாசி, தமிழ்நாடு (இந்தியா)  பணி:  திரைப்பட நடிகை நாட்டுரிமை: இந்தியா பிறப்பு: ஸ்ரீதேவி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டதிலுள்ள சிவகாசியில் ஆகஸ்ட் 13, 1963 ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்ப வாழ்க்கை: ஸ்ரீதேவி தனது தந்தையை “லம்ஹே” திரைப்பட படப்பிடிப்பின் போதும் மற்றும் தாயை “ஜூடாய்” படப்பிடிப்பின்போதும் இழந்தார். அவருடைய பெற்றோர்களை இளம் பருவத்திலேயே இழந்ததால், சமுதாயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியதாயிற்று. 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீதேவியையும், பா...

தேவ் ஆனந்த்

தேவ் ஆனந்த் தேவ் ஆனந்த் அவர்கள், இந்திய திரைப்படத் துறையில் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராவார். திரைப்படங்களில் நடிக்கும் போது, தலையசைத்துக் கொண்டே மிக வேகமாக உரையாடல்கள் வழங்கும் அவரது பாணி, புகழ்பெற்ற முத்திரைகள் பதித்து, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், பலராலும் பின்பற்றப்பட்டது. அவர் பல வெற்றிப் படங்களில் நடித்து, பல விருதுகளையும் வென்றுள்ளார். அவர் புகழின் மகுடமாக இருந்த நேரத்தில், அவரது சமகாலத்தவர்கள் மத்தியில் மிகவும் கவர்ச்சியானவராக கருதப்பட்டார். இந்திய சினிமாவில் அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதுகளான ‘தாதாசாகேப் பால்கே’ விருதும், ‘பத்ம பூஷண்’ விருதும் வழங்கியது. இந்திய சினிமா வரலாற்றில் மிக பெரிய செல்வாக்கு மிகுந்த நடிகர்களில் ஒருவராக கருதப்பட்ட தேவ் ஆனந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும். பிறப்பு: 26 செப்டம்பர், 1923 பிறந்த இடம்: ஷக்கர்கர் தாலுகா, பஞ்சாப் மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா இறப்பு: 3 டிசம்பர், 2011 தொழில்: நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், நவ்கேதன் பட...

சத்யஜித் ரே

சத்யஜித் ரே ‘இந்தியத் திரையுலக மேதை’ எனப் புகழப்படும் சத்யஜித் ரே ஒரு ஓவியர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட சகலகலா வல்லவராக விளங்கியவர். உலக அளவில் சிறந்த இயக்குனராக தன்னை வெளிபடுத்தி, உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற “ஆஸ்கார் விருதினை” இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த முதல் மனிதர். இவருடைய படைப்புகளான ‘பதேர் பாஞ்சாலி’, ‘அபராஜிதோ’, ‘அபுர் சன்ஸார்’ போன்றவை உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. இந்தியாவின் உயரிய விருதுகளான “பாரத் ரத்னா”, “பத்ம ஸ்ரீ”, “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” என மேலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு ஓவியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, திரைப்படத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, மாபெரும் கலைஞனாக விளங்கிய சத்யஜித் ரேயின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகக் காண்போம். பிறப்பு: மே 2, 1921 இடம்: கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம், இந்தியா பணி: இயக்குனர், எழுத்தாளர்,  இசையமைப்பாளர்,  தயாரிப்பாளர் இறப்பு: ஏப்ரல் 23, 1992 நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு ...

தாதாசாஹேப் பால்கே

தாதாசாஹேப் பால்கே தாதாசாஹேப் பால்கே அவர்கள், ‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். 19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ‘சத்யவான் சாவித்ரி’, ‘இலங்கை தகனம்’, ‘ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா’ மற்றும் ‘கலிய மார்டான்’ போன்ற 95 திரைப்படங்களையும், 26 குறுந்திரைப்படங்களையும் இயக்கி, இந்திய சினிமாவை உலகளவில் பிரசித்தியடைய செய்தவர். சினிமாவில் தனது வாழ்நாள் பங்களிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு, அவரது பெயரால் ‘தாதாசாஹேப் பால்கே விருதினை’ இந்திய அரசு, 1969 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்திய சினிமாவின் அங்கமாக இருந்த தாதாசாஹேப் பால்கே அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும். பிறப்பு: ஏப்ரல் 30, 1870 பிறந்த இடம்: த்ரயம்பகேஸ்வர் , நாசிக், மகாராஷ்டிரா, இந்தியா இறப்பு: பிப்ரவரி 16, 1944 தொழில்: திரைப்பட இயக்குநர் , தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு  தாதாசாஹேப் பால்கே அவர்கள், இந்தியாவில் மகாராஷ்டிராவிலுள்ள நாசிக்கில் ...

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரான ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் மகனும், இந்தித் திரையுலகில் நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்பை அளித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்று போற்றப்படுபவர், அமிதாப் பச்சன் அவர்கள். இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் அவர்கள். எண்ணற்ற ‘சர்வதேச விருதுகள்’, ‘பத்மஸ்ரீ விருது’, ‘பத்ம விபூஷன் விருது’, ‘4 முறை தேசிய விருதுகள்’, ’14 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ என 180 விருதுகளைத் தனது திரையுலக வாழ்வில் பெற்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கிய நபர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அமிதாப் பச்சன் அவர்கள், 40 முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர். திரையுலகப் பின்னணியைத் தவிர, 1984 முதல் 1987 வரை இந்தியப் பாராளு...

பிரித்விராஜ் கபூர்

பிரித்விராஜ் கபூர் பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பஞ்சாபில் இருக்கும் ஒரு இளவயது காவல்துறை அதிகாரியின் இளமையான, துருதுருப்பான மற்றும் அழகான மகனான பிரித்விராஜ் கபூர், பாலிவுட்டில் தனது வாழ்க்கையை தொடங்குவதன் நோக்கமாக மும்பைக்கு ஓடி வந்தார். அவர் இன்றும் இந்திய திரைப்பட துறையில் மிக பிரபலமாக நினைவு கூறப்படும் நடிகர்களில் ஒருவராக திகழப்படுகிறார். அவரது கூர்மையான அறிவும், திறமையான அம்சங்களும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பே அவரை இந்திய சினிமாவில் அவரது வழியில் செல்ல முற்பட செய்தது. அவர் உயர்வான வெற்றியை சுவைக்காவிட்டாலும், நினைவில் நிற்கக் கூடிய சில சிறந்த சிறிய கதாபாத்திரங்களைக் கொடுத்துள்ளார். இந்திய சினிமாவின் அமைதியான காலங்களிலேயே அவரது சினிமா தொழில் வாழ்க்கையை தொடங்கினாலும், படிப்படியாக அதில் வளர்ந்து, இறுதியில் பாலிவுட்டில் தனது சொந்த சினிமா செட் நிறுவனமான ‘பிருத்வி தியேட்டர்சை’ நிறுவினார். சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், அவர், ஹிந்தி திரையுலகில் ஐந்து தலைமுறை நடிகர்களைக் கொடுத்திருக்கும், இந்தியாவின் முதல் திரைப்பட குடும்பமான ‘கபூர்ஸ்’ என்பதன் நிறுவனராவார். இத்தகைய சிறப்பும...